ஆட்ட நிர்ணய விவகாரம் : சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை !
இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கை செய்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2020 லங்கா பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் பங்கேற்ற இரண்டு கிரிக்கெட் வீரர்களை தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்டியதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டதால், முன்னாள் வீரருக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விசேட புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
38 வயதான அவர்,முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை துபாயில் இருந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் அணுகி, போட்டியின் போது போட்டிகளை ‘ஃபிக்ஸ்’ செய்ய தூண்டினார்.
லங்கா பிரீமியர் லீக் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 முதல் டிசம்பர் 17 வரை ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. எவ்வாறாயினும், இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை