‘சக்வல – பிரபஞ்சம்’ வேலைத் திட்டம்: 75 ஆவது பஸ் அன்பளிப்பு செய்த சஜித்! சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு
நூருல் ஹூதா உமர், ஐ. எல். எம். நாஸிம்
எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் ‘சக்வல-பிரபஞ்சம்’ வேலை திட்டத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலியின் முயற்சியால் 75 ஆவது பஸ்ஸை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்த பஸ், விளினையடி சந்தியிலிருந்து ஆரம்பித்து பழைய கல்முனை வீதி – பூமரத்துச் சந்தியினூடாக தேசியக் கல்லூரி வளாகத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் செலுத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ கலந்துகொண்டு பஸ்ஸை கல்லூரி அதிபர் நஜீபா ரஹீமிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் ஐ. எல்.எம்.மாஹீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். ஹனிபா சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா, ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி, உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை