வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்து தாக்குதல் : யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளது.
கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதலாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்கு பணம் கொடுத்து, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரித்தனர்.
கருத்துக்களேதுமில்லை