தலைமன்னார் – கொழும்பிற்கிடையில் கடுகதி புகையிரத சேவை

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதே தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி சேவையானது ஆரம்பித்து வைக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்திய மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் குறித்த சேவை அமையும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.