பிரெஞ்சுப் பாண் தயாரித்த இளைஞருக்கு யாழில் கௌரவிப்பு!
உலகின் மிகப் பிரபலமான உணவுகளில் ஒன்றாக பிரெஞ்சுப் பாண் உள்ளது. அந்தவகையில் பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (Baguette) தயாரிக்கும் போட்டியில் இவ்வாண்டு வெற்றிபெற்ற இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜாவைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பார மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் இக் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தர்சனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் பரீஸில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் 126 போட்டியாளர்கள் பங்கு பற்றிய குறித்த போட்டியில் அவர் வெற்றி வாகை சூடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பிரான்ஸின் ஜனாதிபதி மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பாணை வழங்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை