அடுத்த சில நாட்களில் கிடைக்கவுள்ள கொடுப்பனவு! வெளியான விசேட அறிவிப்பு..T

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பை போன்று வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவுகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்

இந்த பதிவில், 647,683 பேருக்கு முன்பை போன்று கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த சில நாட்களில் பணம் செலுத்தப்படும்.

அடுத்த சில நாட்களில் கிடைக்கவுள்ள கொடுப்பனவு! வெளியான விசேட அறிவிப்பு | Welfare Allowance To Sri Lanka People

இதன்படி, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 88,602 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான உதவித் தொகையும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் உதவித்தொகையும் வழங்கப்படும்.

முதியோர் கொடுப்பனவு, அஞ்சல் அலுவலகங்கள் ஊடாகவும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.