சர்வதேச இளைஞர் தின கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கல்முனை கிலிங்ஸ்டன் இளைஞர் கழகம் சம்பியன்!

 

நூருல் ஹூதா உமர்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம் ஸமீலுல் இலாஹி மற்றும் கல்முனை இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம். அஸீம் ஆகியோரின் ஒழுங்கமைப்புடன் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கல்முனை பிரதேச செயலகப்பிரிவின் மூன்று இளைஞர் கழகங்களும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் மூன்று இளைஞர் கழகங்களும் கலந்து கொண்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கல்முனை இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம்.அஸ்கி, சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எ.எம்.ஹிஸாம் ஏ பாவா மற்றும் உப அமைப்பாளர் எம்.எஸ்.எம்.எ. சம்லி, தேசிய இளைஞர் சம்மேளன உறுப்பினர் எ.எ.எம்.எ. சிப்னாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சுற்றுப்போட்டியில் சம்பியனாக கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கிலிங்ஸ்டன் இளைஞர் கழகமும் இரண்டாம் இடத்தை கல்முனை இளைஞர் கழகமும் மூன்றாவது இடத்தை சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் மாஸ் இளைஞர் கழகமும் நான்காம் இடத்தை பிளையிங் ஹோர்ஸ் இளைஞர் கழகமும் பெற்றுக் கொண்டன.

இதில் சம்பியனுக்கு வெற்றிக் கிண்ணமும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன் ஏனைய இடங்களைப் பெற்றவர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.