கைது செய்யப்படுவாரா மேர்வின் சில்வா?
மேர்வின் சில்வாவின் கருத்திற்கு எதிராகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் நேற்று (16) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
”இது சிங்கள பௌத்த நாடு. நான் வடக்கு, கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன் ”என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமையில் தெரிவித்திருந்த கருத்தானது பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை