குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்!
குருந்தூர் மலையில் நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
சிவசேனை உள்ளிட்ட இந்து பௌத்த மத அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்திலுள்ள எமது மத தலைவர்கள் அவைரும் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம்.
குருந்தூர் மலை பிரச்சினை போன்று ஏனைய விகாரைகளில் உள்ள பிரச்சினைகளுக்கும் அமைப்பு என்ற ரீதியில் ஒன்றிணைந்து சில சிக்கல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் நாங்களே முன்வந்து பதிலளிக்கவும் குருந்துர் மலையில் பௌத்த விகாரை போன்று இந்து ஆலயம் ஒன்றை அமைத்து இந்து பௌத்த மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை உறுதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
இந்த இந்து பௌத்த அமைப்பின் ஊடாக எடுத்த தீர்மானங்களுக்கு அமைவாக நாங்கள் இரு தரப்பினரும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைவாக செயற்படுவோம்.
அதேபோன்று நாளைய தினம் நடத்தவிருக்கும் பொங்கல் நிகழ்வுகள் போன்ற சிங்கள பௌத்த நிகழ்வுகளை குருந்தூர் மலையில் நடத்த வேண்டாம் என நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வு மற்றும் எதிர்காலத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் பௌத்த நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
குருந்தூர் மலையில் இந்துக்கள் இந்து ஆலயத்திலும் பௌத்தர்கள் பௌத்த விகாரையிலும் வழிபாடுகளில் ஈடுப்படும் வகையில் கட்டமைப்புகளை அமைக்க தீர்மானித்துள்ளோம்.
சில பயங்கரவாத பிரிவினருடன் இணைந்து சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒற்றுமையாக செயற்படுவோம் என்று வடக்கிலுள்ள தமிழ் சிங்கள மக்களிடமும் இந்து மத தலைவர்களிடமும் கேட்டுகொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை