குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!
இனவாதத்தை தூண்டும் ‘பௌத்தர் எழுக!’ எனும் வாசகத்துடன் பிரதேசத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள குருந்தூர்மலையில் இந்து வழிபாடுகளுக்கு தடையில்லை என தொல்பொருள் திணைக்களம் அண்மையில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஊடாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் பொங்கல் விழாவை நடத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் தடை ஏற்படுத்தாது என, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குருந்தூர்மலை ஆதிசிவன் அய்யனார் கோயில் அறங்காவலர் குழு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் தனஞ்சயன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை