காலநிலை மாற்றம் – இலங்கை எதிர்வரும் வருடங்களில் கடும் குடிநீர்நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என எச்சரிக்கை

இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரித்துள்ளார்.

அரசாங்கம் இதனை எதிர்கொள்வதற்கான திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றமே குடிநீர்தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாக காணப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மழைவீழ்ச்சி காலங்களில் ஏற்கனவே மாற்றங்கள் தென்படத்தொடங்கிவிட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழமையாக வருடாந்தம் இலங்கையில் 2500 மில்லிலீற்றர் மழை பெய்யும் மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியே அதிகளவு மழைக்காலம் என தெரிவித்துள்ள அவர் காலநிலை மாற்றம் காரணமாக மேமாதத்தில் மாத்திரம் 2500 மில்லிலீற்றர் மழைபெய்யலாம் நாங்கள் இதனை எதிர்கொள்ள தயாராகயிருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்கமுடியாதது குறிப்பாக உயர்வலயங்களில் என அவர்தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.