ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்! பெற்றோர் மன்னிப்பு கோரினர்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் தனது மகனின் கருத்துக்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஓமல்பே  சோபித தேரரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் தமது மகனின் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோரியுள்ளனர்.

ஏனைய மதங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜெரோம் பெர்னாண்டோ தெரிவிப்பதைக் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து சிஐடியினர் அவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மே 14 ஆம் திகதி ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூருக்கு சென்றார் – இதேவேளை நீதிமன்றம் அவருக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.