‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ முல்லையில் சிறப்புற இடம்பெற்ற நூல் அறிமுக விழா
விஜயரத்தினம் சரவணன்
‘மலையகத் தமிழ் மக்களுடைய 200வருட வரலாறு’ எனும் நூல் அறிமுகவிழா, ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் சிறப்புற இடம்பெற்றது.
கலாபூசணம் இரா.சுப்பிரமணியம் என்பவரால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நூலின் அறிமுக விழா, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்று, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதையடுத்து, நூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
அந்தவகையில் நூலினுடைய முதற்பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், ஊடக நிறுவனமொன்றின் பணிப்பாளரான கந்தையா பாஸ்கரனிடம் கையளித்து நூல் அறிமுகத்தை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்துகொண்ட ஏனையவர்களும் குறித்த நூலைப் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், பெருந்திரளான பொதுமக்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை