மாளிகைக்காடு ஹூசைன் வித்தியாலய ‘முத்தாய்ப்பான முத்து’ தொடக்கவிழா!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமுஃகமுஃ அல்- ஹூசைன் வித்தியாலய 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், பாடசாலையின் முதல் ஆசிரியரும், இரண்டாவது அதிபருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். ஏ. நழீரின் ஓய்வை முன்னிட்டும் பாடசாலை பழைய மாணவர்கள் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ‘முத்தாய்ப்பான முத்து’ விழாவின் முதல் கட்ட டீ சேர்ட் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர்கள் செயற்குழு செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான நூருல் ஹூதா உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய அபிவிருத்தி பிரிவுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பீ. ஜிஹானா ஆலிப், கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான திருமதி ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ், இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், சாய்ந்தமருது அனைத்து பொதுநிறுவனங்கள் அமைப்பின் தலைவரும், அமானா நற்பணி மன்ற தலைவருமான ஏ.எல். பரீட், பாடசாலையின் பிரதியதிபர் ஏ.எல்.எம். நளீம், ஆசிரியர்கள், அல்-ஹூசைன் வித்தியாலய பழைய மாணவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ‘முத்தாய்ப்பான முத்து’ விழா தொடர்பிலும், பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், புதிய அதிபர் விடயங்கள் தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டு கலந்துரையாடப்பட்டது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.