‘அடித்தால் திருப்பி அடியுங்கள்’ அது சட்ட வரம்புக்குட்பட்டதே! மலையக மக்களுக்கு மனோ அறைகூவல்

 

விஜயரத்தினம் சரவணன்

மலையக மக்களை யாரேனும் தாக்கினால் அந்த வன்முறைக்கு எதிராகவும், தற்காத்துக்கொள்ளவும், திருப்பி தாக்குங்கள் என மனோகதேசன் மலையக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாத்தறையில், மலையக மக்கள் சிலர் தாக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டிப் பேசிய மனோகணேசன், அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200வருட வரலாறு’ எனும் வரலாற்று நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

வன்முறையாளர்களுக்கு அடிதான் புரிகின்ற வார்த்தை எனில் அதை பேச நாம் தயார் என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.

நீதியரசர் இளஞ்செழியன் தனது தீர்ப்பு ஒன்றில், தற்காப்புக்காக திருப்பி அடிக்கும் உரிமையின் சட்டவரம்பு பற்றிக் கூறியுள்ளார். அதையே நான் இங்கு பிரதிபலிக்கிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை பேச்சுக்கு அழைக்கிறார். ஆனால், நாம் பலமுறை சொல்லியும், அவரது அரசு, எமது மக்களுக்கு எதிராக பெருந்தோட்ட நிர்வாகங்கள் நடத்தும் அராஜகங்களைக் கண்டும் காணாமல் இருக்கிறது.

ஆகவே பெருந்தோட்டங்களில் எமது மக்களின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தராவிட்டால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியுடன் பேச்சில் கலந்துக்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்யும் எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.