அமைச்சர் டக்ளஸ்- கருணா அம்மான் விசேட சந்திப்பு

கடலுணவுகளைத்  தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கடற்றொழில் அமைச்சில் இன்று (21) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும்  கலந்து கொண்டிருந்தனர்.

சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை  ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் எனவும் இச்சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் வலியுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.