யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் சுகாதார பணியாளர் நலனில் கவனம் இல்லை!

 

யாழ்ப்பாண மாநகர சபை சுகாதாரதுறையில் பணியாற்றும் கழிவகற்றல் பணியாளர்கள், அத்தியாவசிய பாதுகாப்பு நலன்களில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் விசேட கவனம் செலுத்தவில்லை என சமூக நலன் விரும்பிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாநகரசபையில் தொழில் புரியும் சுகாதாரதுறை (கழிவகற்றல் ) பணியாளர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளாது, அசுத்தக்கழிவுகளை பாதுகாப்பு கவசஅணிகள் (முககவசம், பாதுகாப்பு கையுறை, பாதுகாப்பு சப்பாத்து) அல்லாது உரிய பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காது பாதுகாப்பின்றி கடமைகளில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் கவனத்தில் எடுத்து பணியாளர்களுக்கு எவ்வித தொற்றுநோய்களும் ஏற்படாத வண்ணம் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலன் விரும்பிகள் விருப்புகின்றார்கள்.

யாழ். மாநகர சபை ஆணையாளர் அவர்களே பணியாளர்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது உங்களின் கடமை அல்லவா? என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.