நான் ரஜனிகாந் அல்ல : மனோ கணேசன்!
யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசுக்கு சொந்தமான ரத்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது.
இது மலையக மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏற்பட்டுள்ள அவமானமாகும்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட முகாமையாளரை உடனடியாக கைது செய்யுங்கள்.
சம்பவம் இடம்பெற்றபோது அமைச்சர் ஒருவர் அங்கு சென்றார் என இவர்கள் கூறுகிறார்கள். எனக்கும் அங்கு சென்றிருக்க முடியும்.
ஆனால், நான் மனோ கணேசன். சிவாஜி கணேசனோ, ரஜினிகாந்தோ அஜித்தோ அல்ல. நான் சென்று பிழையான முன்னுதாரணமாகிவிடக்கூடாது.
நாம் அனைவருடனும் ஐக்கியத்துடன் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எமக்கு யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என்பது உண்மைதான்.
போராட்டத்தின்போது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். இதன்போது நீங்களும் அவர்களுக்கு திருப்பி அடித்தீர்கள் தானே.
எனினும், நாம் யாரையும் திருப்பி அடிக்கவில்லை. இதனால்தான் இந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
வெள்ளையர்களிடம் அடிமையாகி இருந்த நாம், இன்று தோட்ட முகாமையாளர்களிடம் அடிமைகளாக உள்ளோம்.
தோட்டங்கள் ஒன்றும் அவர்களுக்கு உரித்தானது கிடையாது. அவர்களுக்கு குத்தகைக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
கட்சி பேதங்கள் கடந்து, இந்த சம்பவத்திற்கு தீர்வொன்றை வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை