எல்.பி.எல். இன் ஆரம்ப நிகழ்வுகளில் தேசிய கீதம் முறையாக பாடவில்லை! விசாரணை குழு தெரிவிப்பு

எல்.பி.எல். போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மெல்லிசையின் அடிப்படையில் பாடப்படவில்லை என தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம் குறித்து விசாரணை செய்த குழு தெரிவித்துள்ளது.

பாடகி உமார சிங்கவன்ச தேசிய கீதத்தை  அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதம் போன்று பாடவில்லை என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

இந்த நிர்வாகம் பொதுநிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

2023 எல்.பி.எல். போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பாடகி உமார சிங்கவன்ச தேசிய கீதத்தை பாடிய விதம் குறித்து சர்ச்சை உருவாகியமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொதுநிர்வாக அமைச்சு குழுவொன்றை நியமித்திருந்தது.

தேசிய கீதத்தின் மெல்லிசை அரசமைப்பில் நடுத்தர தொனியில் பாடுவதாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உமாரா அந்த கீதத்தை அதிக சுருதியில் பாடியிருந்தார்.

தேசிய கீதத்தை அதிக சுருதியில் பாடும் போது கீதத்தின் முக்கிய பாடல் வரிகளும் சிதைக்கப்பட்டன என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணை குழு சட்டமா அதிபர் திணைக்களத்தை தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபுணர்குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நிகழ்வில் தேசிய கீதத்தை பயன்படுத்துவது தொடர்பில் கூடியவிரைவில் விதிமுறையை சேர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.