போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துக வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டங்கள்!
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக்கோரியும், இறந்தவருக்கு நீதிகோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து குறித்த இளம் குடும்பஸ்தரைத் தாக்கி நிலத்தில் தள்ளியுள்ளனர்.
இதன்போது இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்;தச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று செவ்வாய்க்கிழமை பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தவருக்கு நீதிக்கோரியும் பதாதைகளை ஏந்தியவாறும் சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கருத்துக்களேதுமில்லை