மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின், வைத்தியசாலை அபிவிருத்திச்சபை தொண்டு அமைப்பின் அனுசரணையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருள்கள் மற்றும் உபகரணப்பொருள்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

40 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருள்கள் மற்றும் உபகரண பொருள்கள், அமைப்பின் தலைவர் சுபேதி தேரரால் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொருள்கள் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு வழங்கும் வகையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதி பங்களிப்பு மற்றும் அனுசரணையை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையை சேராதவர்கள் வழங்கி உள்ளனர்.

குறித்த மருத்துவ உபகரணங்கள் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த மருத்துவ பொருள்கள் மற்றும் உபகரணப்பொருள்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அபிவிருத்திச்சபை என குறிப்பிடப்படும் தொண்டு அமைப்பின் அனுசரணையில் அந்த அமைப்பின் தலைவர் சுபேதி தேரர், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.விநோதன் ஊடாக உரிய வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.