காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு
சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளனர்.
மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள், மத குருமார்கள் என அனைவருக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போராட்டத்திற்கு செல்வோருக்கான இலவச வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை