சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விஜயம்
‘லிட்ல் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வியாழக்கிழமை (24) விஜயம் செய்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, வீரர்கள் மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதயம், நெஞ்சு மற்றும் நுரையீரல் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டனர்.
தேசிய வீரர்கள், பயிற்சியாளர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் இந்த விஜயத்தில் இடம்பெற்றனர்.
அவர்களை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய லிட்ல் ஹார்ட்ஸ் திட்டப் பணிப்பாளர் டொக்டர் துமிந்த சமரசிங்க ஆகியோர் வரவேற்றனர்.
‘லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தின்’ தற்போதைய பணிகள் குறித்து வீரர்களுக்கு வைத்தியசாலை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் லிட்ல் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபாவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அண்மையில் அன்பளிப்பு செய்திருந்தது.
இந்தி நிதியானது சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதய மற்றும் அவசர பராமரிப்பு கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும். இந்தக் கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டவுடன் இதய நோயினால் பாதிக்கப்படும் மற்றும் கடுமையாக சுகவீனமுற்ற சிறுவர்களுக்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும்.
கருத்துக்களேதுமில்லை