பண்டார வன்னியனுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி!
விஜயரத்தினம் சரவணன்
வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்று (வெள்ளிக்கிழமை) பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டது.
அந்தவகையில் பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் முல்லைத்தீவு – முள்ளியவளை, கற்பூரப் புல்வெளியில் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், கற்பூரப் புல்வெளியில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர்களான இ.ஜெரோன்சன், கி.சிவகுரு ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை