தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி தொடர்பான கூட்டம்!

ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழையில் இரத்த வங்கியின் தொடர்பான கூட்டம் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியஅதிகாரியின் தலைமையில் நடைபெற்றது.

இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ் தலைமை உரையை நிகழ்த்தினார். அவர் இரத்தவங்கியின் முக்கியத்துவம், அதன் அர்ப்பணிப்பு பற்றி கூறியமையுடன் முகாமைத்துவத்தின் வழிநடத்தலையும் பாராட்டினார்.

இனிவரும் காலத்தில் இரத்தவங்கி வளர்ச்சியடையத் தேவையான முழு நடவடிக்கைகளையும் அதன் விரிவாக்கத்தையும் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு வைத்தியர் மு.சிறிபாஸ்கரன் அவர்களால் 6 மாதகாலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகளைப் பற்றிய விவரங்களையும் மல்ரி மீடியா மூலமாக எடுத்துக் காட்டினார்.

மேலும் தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளரும், யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையின் இரத்தவங்கியின் வைத்திய நிபுணருடைய உரையும் இடம்பெற்றது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களும் வைத்தியர்களும், தாதிய பரிபாலகர்கள், தாதியர்கள் ஊழியர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.