சிறுவர் பாதுகாப்புவாரத்தை முன்னிட்டு கொக்கிளாயில் விழிப்புணர்வு நடைபவனி
விஜயரத்தினம் சரவணன்
மதுரம் அபிவிருத்தி நிலையம் அமைப்பினரால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ‘சிறுவர் வன்முறையை இல்வாதொழிப்போம்’ என்னும் தொனிப்பொருளில் கிராமந்தோறும் விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குறித்த விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
சிறுவர் வன்முறைகளுக்கெதிரான பதாதைகளைத் தாங்கியவாறு, சிறுவர் வன்முறைகளுக்கெதிரான கோசங்களை எழுப்பி இந்த விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறுவர் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனியில் மதுரம் அபிவிரித்தி நிலையம் அமைப்பின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், சிறார்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை