தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு

 

நூருல் ஹூதா உமர்

மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனம் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் முழுநாள் தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு சம்மாந்துறை அல் – மர்ஜான் தேசிய பாடசாலை எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-மர்ஜான் வித்தியாலய அதிபர் எச்.எம். அன்வர் அலி, மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம், மெட்ரோ பொலிட்டன் கல்முனை காரியாலய ஒருங்கிணைப்பாளர் சீனத் ஹானியா , முகாமையாளர் முஹம்மட் சப்னாஸ், கல்வி நிறுவன உதவி முகாமையாளர்கள் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.

மேலும் இந்தச் செயலமர்வில் வளவாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அகமட் சிப்லி, கலந்துகொண்ட நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால கல்வியின் நுட்பங்கள் பற்றி விரிவுரையாற்றினார்.

அன்று மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அகமட் சிப்லி, உட்பட பலரும் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.