திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதி திடீரென சுகயீனமடைந்து உயிரிழப்பு! : மொரகஹஹேனவில் சம்பவம்
திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி, தான் பணிபுரியும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, அங்கு நடனமாடியுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்தபோது அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் சுகயீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை