திஸ்ஸ அத்தநாயக்கவின் முல்லைத்தீவு விஜயம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் செபஸ்தியார் தேவாலயத்துக்கு சென்று, அங்கே மக்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அடுத்து, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டதன் பின்னர், முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க பங்கேற்றார்.
அவரது விஜயத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி, உதவி அமைப்பாளர் எஸ். சத்தியசுதர்சன், வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சனி போன்றோரும் இணைந்திருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை