இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியில் ‘கிட்ஸ் இங்கிளீஸ் காம்ப் – 2023’
நூருல் ஹூதா உமர்
கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக ‘ஆங்கில மொழி மேம்பாட்டு கல்வி’ நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் வருடாந்த சிறுவர் ஆங்கில பயிற்சி முகாமும், பரிசளிப்பு நிகழ்வும் பொத்துவில் நாவலாறுப் பிரதேசத்தில் நடைபெற்றது.
இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத்தின் வழிகாட்டலிலும் எல்டா நிறுவனத்தின் பணிப்பாளர் டீ.கே.எம். மௌசீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆங்கில விருத்திக்குப் பொறுப்பாக இருந்து செயற்படும் பயிற்சி பெற்ற வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு ஆங்கிலப் பாடநெறியில் அதிக பயிற்சி களைப்பெற்றுத்தந்ததுடன் மாணவர்களின் ஆளுமைகளையும் அவர்களது உள்ளார்ந்த திறமைகளையும் வெளிக் கொணர்வதற்கு வாய்ப்பபை ஏற்படுத்தியது. அத்துடன்
முகாமில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை