புரட்சியை ஏற்படுத்தும் இந்திய ரயில்வே

தேசத்தின் உயிர்நாடி என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்திய ரயில்வே, அதன் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த நவீனமயமாக்கல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், ‘அமிர்த பாரத்’ என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பாகும்.

இந்தியாவின் இந்த இலட்சிய முயற்சியானது, பிராந்தியத்துக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதோடு, வினைத்திறனான போக்குவரத்து மையங்களாக மட்டுமல்லாமல், இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் ரயில் நிலையங்களை அமைத்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘அம்ரித் பாரத்’ கருப்பொருளின் கீழ், இந்திய ரயில் நிலையங்கள் அழகியல், வசதிகள் மற்றும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி விரிவான மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றன.

தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் வரலாற்றைப் பிரதிபலிக்கும் கூறுகளை இணைத்துக்கொண்டு பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் நிலையங்களை உருவாக்குவதே இலக்காகும்.

அத்தோடு, பல ரயில் நிலையங்கள் பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை பாணிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன, அல்லது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, வருகின்றன.

ரயில் சேவையின்போது பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள், உணவு விடுதிகள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் பகுதிகள் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்திதொரு பகுதியாக, இந்தியா முழுவதும் 508 ரயில் நிலையங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கு, 3பில்லியன் டொலர்கள் பெறுமதியான திட்டத்தினை அங்குராட்பணம் செய்துள்ளார்.

வளர்ச்சி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியா, அமிர்த காலத்தின் (பொற்காலம்) தொடக்கத்தில் உள்ளது. புதிய ஆற்றல் புதிய உத்வேகம், புதிய தீர்மானங்கள், மூலமாக தற்போது இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள 1300 முக்கிய ரயில் நிலையங்கள் இப்போது அம்ரித் பாரத் ரயில் நிலையமாக உருவாக்கப்படவுள்ளன. அவை நவீன முறையில் மீண்டும் மேம்படுத்தப்படவுள்ளதோடு அவற்றில் 508 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

508 ரயில் நிலையங்களில் உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். ,ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15 மற்றும் கர்நாடகாவில் 13 நிலையங்கள் உள்ளடங்குகின்றன.

அத்தோடு இத்திட்டம் புத்துயிர் பெற்ற ரயில் நிலையங்களின் பொருளாதார திறனையும் அங்கீகரிக்கிறது. சில்லறை விற்பனை நிலையங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கலாசார மையங்கள் போன்ற வணிக நடவடிக்கைகளுக்கான இடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த நிலையங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் செயற்பாடுகள் நிறைந்த மையங்களாக மாறவுள்ளன.

இந்த இலட்சிய முன்முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், பயண அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் கலாசார மற்றும் உள்கட்டமைப்பு நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை இந்திய ரயில்வே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.