ராஜபக்ஷர்களுக்காகவே நாம் இன்றும் நிற்கிறோம்! தனது நிலைப்பாட்டை கூறிய பிரசன்ன ரணதுங்க
எனது வெற்றிக்காக அல்ல, பொதுஜனபெரமுனவின் வெற்றிக்காகவே தேர்தலில் நின்றதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வயதாகிவிட்டதாக கூறி நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டவர்களில் சிலர் எதிர்க்கட்சியில் இணைந்து ராஜபக்ஷக்களை விமர்சித்தாலும் தாம் இன்றும் ராஜபக்ஷர்களுக்காகவே நிற்பதாக அமைச்சர் கூறினார்.
தம்மை பற்றி யார் என்ன சொன்னாலும் கம்பஹா மக்களுக்கு தெரியும் எனவும் அமைச்சர் கூறினார்.
கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதியில் கிளைச் சங்கங்களை வலுப்படுத்துதல் மற்றும் அங்கத்துவத்தை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு –
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கிராம மட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களின் பலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.
கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி, கட்சியை உருவாக்கி, கிராம அளவில் உறுப்பினர்களைச் சேர்க்கும் கட்சியல்ல இது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கிராமத்திலிருந்து பத்து உறுப்பினர்களை சேர்த்து, அந்த பத்து பேரை இன்னும் பத்து பேரை சேர்த்துக் கொள்ளச் சொல்லி, கிளைகளை உருவாக்கி வளர்க்கப்பட்டது.
இப்போது யார் கதையளந்தாலும் அன்று 2015 இல் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொட மேடையில் ஏறுவதற்கு யாரும் இருக்கவில்லை. மஹிந்த மாகாண முதலமைச்சர்களை விட்டு வெளியேறிய போது நான் மட்டுமே முதலமைச்சராக மேடையில் நின்றிருந்தேன்.
அந்த பலத்தை எனக்கு மேல் மாகாண சபை சில உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற சில உறுப்பினர்களும் ஆதரவு தந்தார்கள். அப்போது அந்த அணி இல்லை என்றால் எனக்கு அந்த பலம் இருந்திருக்காது. நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் மஹிந்த காற்றின் கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் கிளைகளை நிறுவினர். எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள எமக்கு கட்சியை பாதுகாக்க பெரும் உரிமை உள்ளது. மஹிந்த அரசியலுக்கு வருவதாக கூறிய போது பஸில் ராஜபக்சவின் அமைப்பு பலம் கட்சியை நாடளாவிய ரீதியில் வழிநடத்தியது.
அந்த அமைப்பு பலத்தினால்தான் ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. துரதிஷ்டவசமாக இந்த நாடு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.
அது எங்களால் ஏற்படவில்லை. முப்பது வருட யுத்தத்தால் நாட்டின் பொருளாதாரம் அழிந்தது. கறுப்பு ஜூலை 83, 88ஃ89 பயங்கரவாதம், போராட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் பொருளாதாரத்தை அழித்தன. அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 88ஃ89 பயங்கரவாதத்தை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது மக்களுக்கு நினைவிருக்கலாம்.
பின்னர், கொரோனா தொற்றுநோயால் முழு நாட்டையும் மூட வேண்டியிருந்தது. அப்போது நாட்டை மூட வேண்டாம் என்றார்கள். மீண்டும் நாட்டை திறக்க முற்பட்ட போது மக்கள் செத்து மடிவார்கள் என்று கூறி நாட்டை திறக்க வேண்டாம் என அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்கிய பின்பே நாட்டைத் திறந்தார். எனக்கு இப்போது அது நினைவில் இல்லை. நாட்டின் பொருளாதாரம் சரிந்தது எங்களால் அல்ல. ரஷ்ய-உக்ரைன் போரால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன.
கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கியபோது போராட்டம் தொடங்கியது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பெற்று மக்கள் எதிர்பார்த்த இடத்துக்கு நாட்டை கொண்டு செல்ல முற்பட்ட போது ஆரம்பித்த போராட்டத்தால் மொட்டு கட்சியினர் என்னென்ன எதிர்கொள்ள நேரிட்டது என்பது எமக்குத் தெரியும்.
எங்கள் வீடுகளை எரித்துவிட்டு, எங்களை அடித்து நொறுக்கிய பின்னரும் கட்சி எழுந்து நிற்கிறது. ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டின் பலமான அரசியல் கட்சியாகும். ஜனதா விமுக்தி பெரமுனா போராட்டத்தின் பின்னர் எழுச்சி பெற்றது.
கிராமங்களில் அடையாள அட்டை சேகரித்தவர்களும், வங்கிகளை உடைத்தும், பஸ்களுக்கு தீ வைத்தவர்களும் அக்கட்சியிடம் வாக்கு கேட்க வந்தனர். அவர்கள் இப்போது எங்கே? கோட்டாபய ராஜபக்ஷவை நான் குற்றம் சொல்லவில்லை. எங்கள் வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தி சட்டத்தை மக்கள் தவறாக கையில் எடுத்த போது மக்களை அடித்து நம் வீடுகளுக்கு தீ வைக்குமாறு அவர் கட்டளையிடவில்லை. மிகவும் அமைதியாக பதவியை விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
மஹிந்தவும், கோட்டாபயவும் தமது பதவிகளை விட்டு விலகிய போது, நாட்டைப் பொறுப்பேற்குமாறு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களை அழைத்தோம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இந்த சவாலை ஏற்க முன் வந்தார்.
அந்த நேரத்தில், கட்சியாக நாங்கள் அவருக்கு உதவ முடிவு செய்தோம். அதன் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் எம்மால் ஆக்க முடிந்தது. மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் நின்றனர். பொருள்கள் குறைவாக இருந்தன.
ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஒரு வருடத்திற்குள் நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. அதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் சில மக்கள் விரும்பாத முடிவுகளுக்கு நாம் கை ஓங்க வேண்டியுள்ளது.
நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் கட்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நினைத்தோம். அன்று எமது அரசாங்கத்தை அழித்தவர்கள் இன்று ஊடகங்களுக்கு வந்து ஓர் அறிக்கை விடுகின்றார்கள். இப்போது நான் ரணிலின் ஆள் என்று சிலர் கூற முற்படுகின்றனர். எனது பயணம் குறித்து கம்பஹா மக்களுக்குத் தெரியும். 2015 இல் நான் உங்களுடன் நின்றதால் எனது குடும்பத்தினர் என் மீது கோபத்தில் இருந்தனர்.
எனது வெற்றியைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. நான் எப்போதும் பொஹொட்டுவ மக்களை வெற்றி பெறவே செய்ய சொன்னேன். மற்றபடி எனக்கு விருப்பு வாக்கு கேட்கவில்லை. ஆனால் இன்று ராஜபக்ஷக்கள் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களை வயதானவர்கள் என விமர்சிக்கின்றனர். ஆனால் நாம் இன்றும் மஹிந்தவுக்காக நிற்கிறோம்.
நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாயய ராஜபக்ஷவை நேசிக்கிறோம். மஹிந்த போரை முடித்து நாட்டை விடுவித்ததால் நாங்கள் அவரை நேசிக்கிறோம். எம்மைப் போலவே ஜே.வி.பி.யும் இன்று வீதியில் நிற்க காரணம் மஹிந்த யுத்தத்தை முடித்து வைத்ததால் தான்;. அதை மறக்க மாட்டோம். யார் என்ன சொன்னாலும் இந்தக் கட்சியை பாதுகாத்து முன்னேற்றுவது நமது பொறுப்பு. ஆறு அடிகள் முன்னோக்கி வைக்கப் பார்த்து ஓர் அடி பின்னோக்கி வைத்தோம். எனவே இந்த கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும். நாங்கள் அதற்காக அர்ப்பணித்து செயற்படுவோம். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை