பட்டா ரக வாகனம் யாழில் தீயில் எரிந்தது
யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பொருள்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்துக்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை