மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்குதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம் றிபாஸின் வழிகாட்டலில், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்;. ரயீஸின் தலைமையில் ஆரம்ப பிரிவு மற்றும் இரண்டாம் நிலை பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான காலை உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முறைமைப்படுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலையில் உணவு   வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள், சுகாதார கழக மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உணவு விநியோகிப்பவர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.