பாலல்நிலை சமத்துவத்தை கட்டியெழுப்பல் பயிற்சிநெறி!

நூருல் ஹூதா உமர்

‘இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பால்நிலை சமத்துவத்தை கட்டி எழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.நௌபலால் ஏற்பாடு செய்யப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பான விசேட பயிற்சி நெறி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் விரிவுரை மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிரபல வளவாளரும் பிராந்திய உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜே.நௌபல், உளமருத்துவ சமூக உத்தியோகத்தர் எம்.ஆர்.எம். ஹமீம் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த நிகழ்வில் விரிவுரைகளை நடத்தியதுடன் பங்குபற்றுனர்களுடன் கலந்தாலோசனைகளிலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித் கலந்து கொண்டிருந்ததுடன் விசேட கலந்தாலோசனையிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்நிகழ்வில் விசேடமாக வேலைத்தளங்களில் பால்நிலை சமத்துவங்களை எதிர்கொள்ளுதல் ஓர் உளவியல் கண்ணோட்டம் என்ற தலைப்பிலும் பெண்களுக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு பால் ரீதியாக பாரபட்சம் காட்டப்படுதலில் இருந்து விடுகை பெறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.