சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்து!

 

தற்போது சாவகச்சேரி பொலிஸ் பிரதேசத்தினுள் திருடர்களின் நடமாட்டம் அதிகமாகி மக்களின் விடுகளினுள் புகுந்து பெறுமதியான பொருள்கள் நகைகள் என்பன களவாடிச்செல்கின்ற சந்தர்ப்பம் அதிகமாகி வந்துகொண்டு இருக்கின்றது.

குறிப்பாக கணவன் மற்றும் மனைவி அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்கின்ற போது அவர்கள் கடமைக்கு செல்லும் சந்தர்பங்களில் வீட்டில் யாரும் இல்லாத போது திருடர்கள் வீட்டிலுள் புகுந்து பொருள்களை களவாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே உங்களின் கீழ் கடமை புரிகின்ற அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கீழ் உள்ள விடயங்கள் தொடர்பாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் கடமைக்கு வரும் போது தமது பெறுமதியான பொருள்கள் மற்றும் தங்க நகைகளை அலுமாரிகளில் வைக்காமல் மிகவும் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்லவேண்டும்.

கடமைக்கு வரும் போது வீட்டில் யாராவது ஒருவரை நிறுத்திவிட்டு செல்லவேண்டும் அல்லது வீடு தொடர்பான எதாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்லவேண்டும்.

சந்தேகத்திற்கு இடமாக நடமாடுபவர்கள் தெடர்பாக உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அல்லது உங்கள் கிராமசேவையாளருக்கு அறிவித்தல் வேண்டும்.

சி.சி.ரி.வி. கண்காணிப்பு கெமரா பூட்டப்பட்டிருந்தால்
அதன் நேரடி வீடியோவை உங்கள் கை தொலைபேசியில் பதிவுசெய்து அடிக்கடி அதனை பார்வையிட வேண்டும்.

உங்களிடமுள்ள நகைகளை வெளியில் போட்டுக்கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லவேண்டும்.

கோவில்களுக்கு செல்லும் சந்தரப்பத்தில் கட்டாயம் வீட்டில் ஒருவரை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். அல்லது வீடு மற்றும் பொருள்கள் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு செல்லவேண்டும்.

அதிகமான பணம் எக்காரணம் கொண்டும் வீட்டில் வைத்திருக்காமல் அவற்றை வங்கிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதன் மூலமாக உங்கள் பெறுமதியான பொருள்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.