மாகாண பொதுச் சேவை அலுவலக பணியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி!
அபு அலா
கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண பொதுச் சேவையிலுள்ள அலுவலகப் பணியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நெறி மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவின் திருகோணமலை காரியாலய கூட்ட மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவின் மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜீ.தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒருநாள் பயிற்சி நெறிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் வளவாளராகக் கலந்துகொண்டு இந்தப் பயிற்சி நெறியை நடத்தி வைத்தார்.
இதன்போது, அரச பணியாளர்களின் கடமைப் பெறுப்புக்கள், கடமைகள், செயற்பாடுகள், நடத்தைகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய பயிற்சிகள் நடத்தப்பட்டதுடன், அவர்களுக்குள் செய்முறை பயிற்சியும், அறிமுகப் பயிற்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
அலுவலகப் பணியாளர்கள் தங்களின் அறிவுத்திறன்களையும் விருத்தி செய்கின்ற அதேவேளை, இந்தப் பயிற்சியில் பெற்ற விடயங்களை தங்களின் அலுவலகங்களில் அமுல்படுத்தி செயற்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நாம் பெற்ற பயிற்சியில் பிரதிபலன்களைக் கண்டுகொள்ளலாம் என கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவின் மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜீ.தெய்வேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பயிற்சி நெறியில் மாகாண அமைச்சுக்கள், மாகாண திணைக்களங்கள், நிறுவனங்கள் போன்ற பல அரச காரியாலயங்களில் கடமையாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இப்பயிற்சி நடாத்தப்பட்டதுடன், பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை