மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காற்றாலைகள் அமைக்க வேண்டும்

பூநகரி, மன்னார் பகுதிகளில் அமைக்கவிருக்கும் காற்றாலைகள் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பூநகரி, மன்னார் பகுதிகளில் விலை மனு கோரப்படாமல் காற்றாலை மின் பிறப்பாக்கிகள் உருவாக்கப்பட இருப்பதாகவும் இந்திய முதலீட்டாளர்கள் இதற்கான முதலீட்டை செய்ய இருக்கின்றார்கள் என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதிலே விலை மனு கோரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைக்கின்றார்கள். அதே நேரத்தில் இந்த முதலீடுகள் வரவேண்டும் என சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.

அத்துடன் இந்த காற்றாலை மூலம் சமூகத்திற்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் பலர் விமர்சிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த விடயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு இந்த முதலீட்டை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.