தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாக தெரிவு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது.

கட்சியின் நிர்வாக செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச கிளை களினதும் நிருவாகிகளின் பிரசன்னத்தோடு நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, மன்னார் மாவட்ட கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், செயலாளராக சூசையப்பு துரம், பொருளாளராக முன்னாள் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி , துணைத்தலைவராக ஜெயக்குமார் ,துணைச் செயலாளராக செல்வராணி சோசை தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை மாவட்ட கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக 10 பெரும் தெரிவு செய்யப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.