ஹக்கீம் கலந்துகொண்ட அஷ்ரப் நினைவு ஏற்பாடு!
நூருல் ஹூதா உமர்
முன்னாள் அமைச்சரும், ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் மறைந்த எம்.எச்.எம் அஸ்ரப்பின் 23 ஆவது நினைவு தினம் எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி சாய்ந்தமருதில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அது தொடர்பாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களினதும் மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் அம்பாறை மாவட்டம் பூராக நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கல்முனையில் இது சம்பந்தமான கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் தலைமையில் கல்முனை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டமானி ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். சி.எம். பைசல் காசிம், முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை