இனப்பிரிவினையை ஏற்படுத்த அரசு திட்டம் தீட்டுகிறதாம்! சாணக்கியன் குற்றச்சாட்டு
பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கு உட்படுத்தி தாங்கள் ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி செயற்படுகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சி குடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சியை கைப்பற்றும் முதல்கட்டமாக வடக்கு கிழக்கிலே சில சம்பவங்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் –
அண்மையில் திருகோணமலையில் ஜனாதிபதியும் இந்தியாவும் செய்த சில ஒப்பந்தங்களைப் பற்றி சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இவ்வாறாக இந்த விடயங்களை அவதானிக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திலே குருந்தூர் மலையிலே மாபெரும் எதிர்ப்பு பேரணியிலேயே தமிழ் மக்கள் ஈடுபட்டனர்.
பிக்குமார் அவ்விடத்தில் முரண்பட்டனர். அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் ஆளுநருடைய அலுவலகத்துக்குள் அடாவடித்தனமாக பிக்குமார்கள் சென்றனர்.
அந்த விகாரை கட்டுவதை ஒரு பெரிய பூகம்பமாக தெற்கிலே பரபரப்பாகச் செய்திகள் பரப்பினர். இவ்வாறான சில விடயங்களில் இன முறுகளுக்கான ஆரம்ப நிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. -எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை