மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டீசல் விலையேற்றத்தினால் மீன்பிடித் தொழிலை முறையாக கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல மீனவர்கள் மீன்பிடித் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்ணெண்னையின் விலையை குறைக்குமாறு அல்லது மானியம் முறையில் மீனவர்களுக்கு வழங்குமாறு மீனவ சமூகம் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அகில இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி சுப்பிரமணியம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை