யாழில் வெற்றிநடைபோடும் “புஷ்பக 27”
ஈழத்தில் தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையைத் தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.
சத்தியா மென்டிசின் திரைக்கதையில், காரை சிவநேசனின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தினைக் காண ஏராளமான மக்கள் திரையரங்கிற்குப் படையெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இத் திரைப்படத்தை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை