ஒட்டுசுட்டானில் உழவு இயந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் பலி : உழவு இயந்திர உரிமையாளர் உட்பட இருவர் கைது

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் 21ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில், வீதியில் நின்ற உழவு இயந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை, பொன்னக பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் நெல்லினை காயப்போட்டு, அதனை ஏற்றும் பணிகளுக்காக உழவு இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தபோதே மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதன் அடிப்படையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் உட்பட இருவர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.