சாய்ந்தமருது, காரைதீவு கோட்ட கல்வி முன்னேற்றக் கலந்தாய்வு!

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது மற்றும் காரைதீவு கல்விக் கோட்டத்தின் கல்வி முன்னேற்ற கலந்தாய்வு சாய்ந்தமருது கமுஃகமுஃமல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து வெளியிட்ட வலயக்கல்வி பண்ணிப்பாளர் அதிபர்களும், ஆசிரியர்களும் இப்பிரதேச கல்வி முன்னேற்றத்துக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் பகுதிவாரியாக என்ன பகுதியில் மாணவர்கள் குறைவாக புள்ளி பெறுகிறார்கள் என்பதை பகுப்பாய்வு செய்து அதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிக்குமாறு அதிபர்களை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கல்முனை வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான என். வரணியா, பி. ஜிஹானா ஆலிப், எம்.எச். றியாசா, உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம். மலிக், உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான யூ. எல். றியாழ், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டெவிட் உட்பட அதிபர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.