கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நீதியான விசாரணை தேவை! விக்னேஸ்வரனும் வலியுறுத்து

இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் மன வேதனையை தருகிறது.

நான் நீதிபதியாக செயற்பட்டவன் என்ற நீதியில் விசாரணை முடிவுறாமல் இவர்கள் தான் குற்றவாளி எனக் கூற முடியாது.

தாதியர்களின் தவறே சிறுமியின் கை துண்டிக்க பிரதான காரணம் என செய்திகள் வெளியாகிய நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுமி தனது கல்விக்காலம் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் மற்ற இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.