பொன் விழாவினைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

யாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் தனது பொன்விழாவைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை மாணவிகளின்  சைக்கிள் பவனியும், நடைபவனியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள், நலன் விரும்பிகள் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அயல் பாடசாலைகளான அப்பா பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி ஆகிய பாடசாலைகள்,  மாணவிகளுக்கு  அமோக வரவேற்பளித்து நீராகரம் வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.