வடக்கு கிழக்கில் காணியற்றோருக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு! ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவிளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான இரும்பு திருடர்களை கைது செய்வதற்கும் , இரும்புத் திருட்டுக்களைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்துடன் வலி.வடக்கு பகுதிகளில் காணி இல்லாமல் முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வலி.வடக்கில் இனம் காணப்பட்டுள்ள அரச காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.