கல்முனையில் ‘சிசுபல சமாஜ சத்காரய’ வேலைத்திட்டம்: மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 345 மாணவர்களுக்கான இலவச பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மகாசங்க முகாமையாளர் எம்.என்.எம். நௌசாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் கௌரவ அதிதியாகவும், விசேட அதிதிகளாக சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான எஸ். சித்தி பரீரா, ஏ.எம். பைசால், யூ. கே.சிறாஜ் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

அதிதிகளாக வலய உதவி முகாமையாளர்கள் மற்றும் பிரிவுகளுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.