சமாதான நீதிவானாக சத்தியப் பிரமானம்!
பன்னாலை, தெல்லிப்பழையைச் சேர்ந்த லயன் சிவஞானம் செந்தூரன் கடந்த புதன்கிழமை யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதிவானாக சத்தியப் பிரமானம் செய்துகொண்டார்.
இவர் கிளிநொச்சி கட்டடங்கள் திணைக்களத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆவார். யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தொழிநுட்ப உத்தியோகத்தரும் ஆவார்.
சுன்னாகம் லயன்ஸ் கழகம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினராகிய இவர், பல்வேறு சமய, சமூக அமைப்புக்களில் பதவி வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை